முச்சக்கர வண்டியில் இருவர் கார்களில் மூவர் மட்டுமே பயணிக்க முடியும் – பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன அறிவிப்பு!
Monday, May 11th, 2020
கொரோனா வைரஸ் பரம்பல் காரணமாக முடக்கப்பட்டிருந்த இலங்கை இன்றுமுதல் வழமைக்கு திரும்பியுள்ளது.
அதற்கமைய இன்றையதினம்முதல் பேருந்துகளில் பயணிக்க விரும்பாதவர்கள் வாடகை வாகனங்களில் பணிக்கு செல்ல சந்தர்ப்பம் வழங்கப்படுவதாக பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
அதற்கமைய முச்சக்கர வண்டிகளில் பயணிப்பவர்களுக்கு புதிய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதுடன் சாரதிக்கு மேலதிகமாக 2 பேர் மாத்திரமே பயணிக்க முடியும் எனவும் அவர் அறிவித்துள்ளார். இதேவேளை, மோட்டார் வாகனங்களில் செல்பவர் என்றால் சாரதிக்கு மேலதிகமாக 3 பேர் மாத்திரமே பயணிக்க முடியும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
புதிய அமைச்சர்கள் சத்தியப் பிரமாணம் இன்று ?
ஜனாதிபதி பொது மன்னிப்பளிப்பு: விடுதலையாகிறார் ஞானசார தேரர்!
ஆசிரியர் இடமாற்றம் தொடர்பான பிரச்சினைகளுக்கு விரைவாக தீர்வுகளைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை முன்னெடு...
|
|
|


