முச்சக்கரவண்டி தொடர்பில் ஜனாதிபதியின் அறிவிப்பு!
Wednesday, August 22nd, 2018
முச்சக்கரவண்டி சாரதிகளின் வயதெல்லை தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அதிரடி அறிவிப்பொன்றை விடுத்துள்ளார். அதன்படி முச்சக்கரவண்டி சாரதிகளுக்கான குறைந்தபட்ச வயதெல்லையை 35ஆக மட்டுப்படுத்த தேவையில்லை தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் குறித்த விடயம் தொடர்பில் பேசப்பட்ட போதே ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார். ஜனாதிபதியின் குறித்த அறிவிப்பு முச்சக்கரவண்டி சாரதிகளுக்கு மகிழ்ச்சியளிக்கும் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
முச்சக்கரவண்டியை செலுத்தும் சாரதிகள் 35 முதல் 70 வயதிற்கு உட்பட்டவர்களாக மாத்திரம் இருக்க வேண்டும் என கடந்த வாரம் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
தனியார் பஸ் பணிப் பகிஸ்கரிப்பு போராட்டம் ஆரம்பம்!
பெரும் நெருக்கடியில் சிக்கியுள்ளது அரசு - விக்டர் ஐவன் !
விபத்துக்குள்ளான கப்பலை அகற்றுமாறு உத்தரவு - சமுத்திரவியல் சூழல் பாதுகாப்பு அதிகார சபை!
|
|
|


