முச்சக்கரவண்டி சாரதிக்கு வயதெல்லை 35

Monday, December 19th, 2016

முச்சக்கரவண்டி ஓட்டுனர்களுக்கான சாரதி அனுமதிப் பத்திரம் வழங்கும் வயதெல்லையை 35ஆக அதிகரிப்பதற்கு போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சு முடிவு செய்துள்ளது.

முச்சக்கரவண்டி சங்கங்களை தெளிவு படுத்தும் கலந்துரையாடல் ஒன்று இன்று கொழும்பில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தலைமையில் நடத்தப்பட்டது. இதன்போதே குறித்த முடிவை அமைச்சர் தெரிவித்தார்.

இதில், முச்சக்கரவண்டிகளை ஒழுங்கு படுத்துவதற்கான தேசிய கொள்கை ஒன்றை வகுப்பதற்கும் அமைச்சு தீர்மானித்துள்ளது.

நாட்டில் தற்போது சுமார் 12 இலட்சம் முச்சக்கரவண்டிகள் காணப்படுவதாகவும், எதிர்காலத்தில் முச்சக்கரவண்டிகள் இறக்குமதி செய்வதை வரையறுக்க நடவடிக்கை எடுப்பதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.

இந்த சட்ட திட்டங்களை எதிர்வரும் தினங்களில் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து நிறைவேற்றிக் கொண்டதன் பின்னர் சட்ட வரைவு திணைக்களத்திற்கு சமர்ப்பிப்பதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.

முச்சக்கரவண்டிகளில் பயணிக்கும் பயணிகளினதும் சாரதிகளினதும் பாதுகாப்பு கருதியே இந்த தேசிய கொள்கையை வகுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டதாக போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா மேலும் கூறியுள்ளார்.

5936364-Three_wheelers-0

Related posts: