முச்சக்கரவண்டிகளின் பயணக் கட்டணம் அதிகரிப்பு!

Monday, March 26th, 2018

முச்சக்கரவண்டிகளில் இரண்டாவது கிலோ மீற்றரிலிருந்து அறவிடப்படும் கட்டணம் 10 ரூபாவால் இன்று(26) முதல் அதிகரிக்கப்படுவதாக முச்சக்கரவண்டிகள் உரிமையாளர்கள் சங்கம்தெரிவித்துள்ளது.

வாகன உதிரி பாகங்களின் விலை அதிகரிப்பு, எரிபொருள் விலை அதிகரிப்பு போன்ற காரணங்களால் குறித்த விலை அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டதாக குறித்த சங்கம் குறிப்பிட்டுள்ளது.

மேலும் வாகன உதிரிப் பாகங்களின் விலையினை குறைத்து முச்சக்கர வண்டிகளின் சேவைக்கான தேசிய கொள்கையை உருவாக்குமாறு கோரி இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம்குறிப்பொன்றினை முன்வைக்க உள்ளதாகவும் குறித்த சங்கம் தெரிவித்துள்ளது.

முன்னர் முதலாவது கிலோ மீட்டருக்கு 50 ரூபாவும், இரண்டாவது கிலோ மீட்டருக்கு 40 ரூபாவும் அறவிடப்பட்டு வந்த நிலையில், இன்று முதல் முதலாம் கிலோ மீட்டர் இலிருந்து இறுதிக்கிலோ மீட்டர் வரையில் தலா 50 ரூபா வீதம் அறவிடப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts: