முக்கொம்பான் ஆசிரியர்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் கோரிக்கை – பொன்னாலை – முக்கொம்பான் பேருந்து சேவையை முன்னெடுக்க நடவடிக்கை!

Friday, November 19th, 2021

கிளிநொச்சி  – முக்கொம்பான்  ஆசிரியர்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் விடுத்த கோரிக்கைக்கு அமைவாக பொன்னாலையிலிருந்து முக்கொம்பான் வரையில் பேருந்து சேவை ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடபிராந்திய முகாமையாளர் குலபாலசெல்வம், மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ் மாவட்ட நிர்வாக செயலாளர் சிவகுரு பாலகிருஸ்ணன் வட மாகாண ஜனநாயக போக்குவரத்து ஊழியர் சங்க நிர்வாகத்தினரின் பங்குபற்றுதலுடன் வட பிராந்திய இ.போ.ச காரியாலயத்தில் குறித்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

மேலும் யாழ் பேருந்து நிலையத்தில் பொலிஸ் காவலரன் அமைக்கப்படவுள்ளதுடன் மற்றும் கலாச்சார சீரழிவுகள் நிறுத்தப்படுவதற்கான சூழ்நிலையும் உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்தாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தேவையற்ற வகையில் வாகனங்கள் உள் நுழைவது தடுக்கப்படுவதுடன் பொதுமக்களுக்கு சிறப்பான பாதுகாப்பான போக்குவரத்து வழங்குவதுடன்  உட்பட பல அசௌகரியங்கள் தவிர்க்கப்படும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டது.

இந்நிலையில் குறித்த பிரச்சினைக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ் மாவட்ட நிர்வாக செயலாளர் சிவகுரு பாலகிருஸ்ணன்  அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கவனத்திற்கு கொண்டுசென்றதன் அடிப்படையில் அதற்கான தீர்வுகளும் பெற்றுக்கொடுக்கப்பட்டது.

மேலும் வட பிராந்திய இ.போ.ச சாலைகளில் நிலவும் ஊழியர்கள் பற்றாக்குறை, நிரந்தர நியமனம், பதவியுயர்வு, உள்ளக வீதிகள் புனரமைப்பு உள்ளிட்ட பல்வேறுபட்ட விடயங்கள் தொடர்பாக ஆராயப்பட்டது.

குறித்த பிரச்சிரைனகளை கேட்டறிந்துகொண்ட சிவகுரு பாலகிருஸ்ணன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கவனத்திற்கு கொண்டு சென்று காலக்கிரமத்தில் தீர்வு பெற்று தருவதாக தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: