முகக் கவசம் இன்றி பயணிப்பவர்களுக்கு அனுமதி கிடையாது – தனியார் பேருந்து சங்கத்தின் தலைவர் அறிவிப்பு!
 Monday, October 5th, 2020
        
                    Monday, October 5th, 2020
            
முகக்கவசம் அணியாதவர்கள் பேருந்துகளில் அனுமதிக்கப்படமாட்டார்கள் என தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
நாட்டில் தற்போது சமுக மட்டத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் ஏற்பட்டவர்கள் இனம் காணப்பட்டதையடுத்து, மக்களின் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
இதேநேரம், சுகாதார அறிவுறுத்தல்களுக்கு அமைய போக்குவரத்தை முன்னெடுக்குமாறு அனைத்து அதிகாரிகளுக்கும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்.
மேலும் இருக்கைகளின் எண்ணிக்கைக்கு அமைய மாத்திரம் பேருந்து போக்குவரத்தை முன்னெடுப்பதற்கு இலங்கை போக்குவரத்து சபை தீர்மானித்துள்ளது.
கொரோன தொற்று தொடர்பாக வழங்கப்பட்ட சுகாதார அறிவுறுத்தல்களுக்கு ஏற்ப இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக போக்குவரத்து சபையின் தலைவர் சட்டத்தரணி கிங்ஸ்லி ரணவக்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|  | 
 | 
 
            
        


 
         
         
         
        