முகக்கவசத்தை தொடர்ந்து அணியுமாறு வலியுறுத்து மருத்துவ நிபுணர்கள் சங்கம் கோரிக்கை!

Tuesday, June 14th, 2022

நாட்டின் பொருளாதார நெருக்கடி நிலைமை காரணமாக மருந்துகளுக்கு கடுமையான தட்டுப்பாடு நிலவும் தற்போதைய நிலையில் முகக்கவசம் அணிவது ஆரோக்கியமானது என தெரிவித்துள்ள இலங்கை மருத்துவ நிபுணர் சங்கம், தொடர்ந்தும் முகக் கவசம் அணியுமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

முகக்கவசம் அணிவது கட்டாயமில்லை என்னும் சுகாதார அமைச்சின் தீர்மானம் தொடர்பாக அதிருப்தி வெளியிட்டு மருத்துவ நிபுணர்கள் சங்கம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது,

பொதுமக்களுக்கு முகக்கவசம் அணியத் தேவையில்லை என்ற சுகாதார அதிகாரிகளின் முடிவு கவலை அளித்துள்ளது. மருத்துவமனை அமைப்புகளில் சுகாதார பணியாளர்கள் மற்றும் பொது மக்கள் அனைவரும் முகக்கவசம் அணிவது அவசியமா என்பது குறித்து எதுவும் அமைச்சினால் குறிப்பிடப்படவில்லை.

நாட்டின் பொருளாதார நெருக்கடி நிலைமை காரணமாக மருந்துகளுக்கு கடுமையான தட்டுப்பாடு நிலவும் நிலையில் முகக்கவசம் அணிவது கட்டாயம் இல்லை எனும் அரசாங்கத்தின் முடிவு மிகவும் ஆபத்தானது என்றும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts:

அரியாலை மத்தி - தெற்கு பகுதி மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி அவ...
பனம்பொருள் கைப்பணி உற்பத்தியை ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் - வேலணை பிரதேச சபையில் ஈ.பி.டி.பி...
அடுத்த 25 ஆண்டுகளுக்காக புதிய சீர்திருத்த திட்டத்துடன் இலங்கையின் 75 ஆவது தேசிய சுதந்திரதின விழா வை ...