மீள்குடியேற்ற கோரி வலி.வடக்கு மக்கள் பேரணி!

Monday, June 27th, 2016
வலி வடக்கின் மயிலிட்டி, ஊரணி, தையிட்டி, பலாலி மற்றும் காங்கேசன்துறை மக்கள் இன்று காலை 9 மணிக்கு நல்லூர் கந்தசுவாமி ஆலய முன்றலில் அமைதிப்பேரணியை நடத்தவுள்ளனர்.
மயிலிட்டி மீள்குடியேற்ற குழு, மயிலிட்டி மீன்பிடி கூட்டுறவு சங்கமும், நிலன்புரி நிலையத்தின் அமைப்புக்களும் இணைந்து இந்த போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக வலி.வடக்கு மீள்குடியேற்ற குழுவின் தலைவர் குணபாலசிங்கம் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
மயிலிட்டியை சேர்ந்த 3 கிராமசேவகர் பிரிவு மக்களும், பலாலியை சேர்ந்த 5 கிரமசேவகர் பிரிவு மக்களும், தையிட்டியை சேர்ந்த 3 கிராம சேவகர் பிரிவு மக்களும், காங்கேசன்துறையை சேர்ந்த 3 கிராமசேவகர் பிரிவை சேர்ந்த மக்களும் இந்த போராட்டத்தில் பங்கேற்கவுள்ளனர்.
1990ஆம் ஆண்டு இடம்பெயர்ந்த மக்கள் 26 வருடகாலமாக நலன்புரி நிலையங்கள், மற்றும் உறவினர்கள் வீடுகளில் வாழ்ந்து வருகின்றனர்.மயிலிட்டி, பலாலி, ஊரணி, தையிட்டியை சேர்ந்த 6 ஆயிரம் குடும்பங்கள், மீள்குடியேற்றம் செய்யபப்டவுள்ளன. எனினும் மோதலின்போது இடம்பெயர்ந்த 10 ஆயிரம் குடும்பங்கள் இன்னமும் 32 நலன்புரி நிலையங்களிலும், உறவினர் வீடுகளிலும் தங்கியுள்ளனர்.
மயிலிட்டி பிரதேசம் விடுவிக்கப்படாதவிடத்து 32 நலன்புரி நிலையங்களும் மூடப்படபோவது இல்லை எனவும் வலி.வடக்கு மீள்குடியேற்ற குழுவின் தலைவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts: