மீற்றர் பொருத்தாத முச்சக்கரவண்டிகளுக்கு சட்ட நடவடிக்கை!
Wednesday, July 11th, 2018
அடுத்த மாதம் முதலாம் திகதி முதல் மீற்றர் மானி பொருத்தப்படாத முச்சக்கரவண்டிகளுக்கு அபராதம் விதிக்கும் நடவடிக்கையை பொலிஸார் அமுல்படுத்தவுள்ளதாக வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய சபை தெரிவித்துள்ளது.
விடயத்துக்கு பொறுப்பான அமைச்சர் நிமல் சிரிபால டி சில்வா திட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் ஆலோசனை வழங்கியுள்ளதாக வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய சபையின் தலைவர்இ வைத்தியர் சிசிர கோதாகொட தெரிவித்துள்ளார்.
மீற்றர் மானி பொருத்தப்படாத முச்சக்கரவண்டி சாரதிகள் தொடர்பில் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள விதம் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் பரிந்துரைகளுக்கமைய இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Related posts:
இலங்கையில் இயங்கும் 43 தீவிரவாத அமைப்புக்களுக்கு வருகிறது தடை – தீவிர ஆலோசனையில் அரசாங்கம்!
தடுப்பூசிக்கு பற்றாக்குறை - ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச முக்கிய பேச்சு!
குறைந்த வருமானம் கொண்ட மக்களுக்காக உதவி திட்டம் - மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க ...
|
|
|


