மீன்பிடி அபிவிருத்திக்காக வடக்கில் 2 துறைமுகங்கள்!
Monday, February 11th, 2019
வடக்கு மாகாண மீன்பிடி அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் இரும்பெரும் துறைமுகங்கள் அமைக்கப்படவுள்ளன என்று வடக்கு மாகாண மீன்பிடித்துறை அபிவிருத்தித்திட்ட பொறியியலாளர் தெரிவித்துள்ளார்.
பருத்தித்துறையில் அமைக்கப்படவுள்ள நவீன துறைமுகம் 6.5 ஹெக்ரேயர் நிலப்பரப்பில் அமையவுள்ளது. அது 5 மீற்றர் ஆழம் கொண்ட துறைமுகப் பகுதியாக அமையும்.
மன்னார் பேசாலையில் 7.3 ஹெக்ரேயர் நிலப்பரப்பில் துறைமுகம் அமைக்கப்படவுள்ளது. இது 3.5 மீற்றர் ஆழம் கொண்டதாக அமையவுள்ளது. துறைமுக மேடை, இறங்குதுறைகள், வலை திருத்தும் மண்டபம், மீன் ஏல விற்பனை மண்டபம், சிற்றுண்டிச்சாலை, சமூக மண்டபம், தங்குமிட வசதிகள், கழிப்பறை வசதிகள், குளிரூட்டி அறைகள், கழிவுச் சுத்திகரிப்பு நிலையம், எரிபொருள் நிரப்பு நிலையம், நிர்வாகக் கட்டங ;கள், கண்காணிப்புக் கட்டடங்கள் போன்ற வசதிகளை உள்ளடக்கியதாக இந்தத் துறைமுகங்கள் அமைக்கப்படவுள்ளன.
Related posts:
|
|
|


