மீண்டும் லிட்ரோ வீட்டு சமையல் எரிவாயுவின் விலை அதிகரிப்பு!

Sunday, November 6th, 2022

லிட்ரோ வீட்டு சமையல் எரிவாயுவின் இன்று (6) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் மீண்டும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

விலைச் சூத்திரத்தின்படி, திருத்தப்பட்ட விலை அறிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, 12.5 கிலோகிராம் எரிவாயுவின் விலை 80 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், அதன் புதிய விலை 4360 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், 5 கிலோகிராம் எரிவாயுவின் விலை 30 ரூபாவினாலும், 2.3 கிலோ எரிவாயு கொள்கலன் விலை 15 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, இன்று நள்ளிரவு முதல் 5 கிலோகிராம் எரிவாயுவின் கொள்கலன் 1750 ரூபாவுக்கு, 2.3 கிலோ எரிவாயு கொள்கலன் 815 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படும் என லிட்ரோ நிறுவனத் தலைவர் முதித்த பீரிஸ் அறிவித்துள்ளார்.

000

Related posts: