மீண்டும் மலேரியா பரவும் அபாயம்!
Wednesday, January 16th, 2019
மலேரியா நோய் மீண்டும் பரவுவதற்கான அறிகுறிகள் உள்ளதாக சுகாதார அமைச்சு எச்சரித்துள்ளது.
இந்த நோய் வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள் மூலமே இலங்கையில் பரவுவதற்கான சாத்திய கூறுகள் உள்ளதாக, சுகாதார அமைச்சின் மலேரியா ஒழிப்பு பிரிவின் பணிப்பாளர் மருத்துவர் ஹேரத் தெரிவித்துள்ளார்.
கடந்த டிசெம்பர் மாதம் முதல் வாரகாலப்பகுதியில் சியம்பலாண்டுவ பிரதேசத்தில் மலேரியா நோய் தொற்றுக்குள்ளான ஒருவர் அடையாளம் காணப்பட்டார். பின்னர் அவர் இந்தியாவில் இருந்து இலங்கைக்கு வந்தமை தெரியவந்தது.
இந்தநிலையில், தற்போது இலங்கையில் மலேரியா நோய் தொற்று பரவுவதற்கான நிலைமை இருப்பதாக, வைத்தியர் ஹேரத் தெரிவித்துள்ளார்.
எனவே இந்த நோய் தொற்றுக்கு காரணமாகும், வெளிநாடுகளில் இருந்து இலங்கை வருபவர்களை சுகாதார பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும் என சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது.
இருப்பினும் மலோரியா குறித்து பொது மக்கள் அவதானத்துடன் இருக்க வேண்டும் என சுகாதார பிரிவு கோரிக்கை விடுத்துள்ளது.
Related posts:
|
|
|


