மீண்டும் புதுவருட கற்றல் நடவடிக்கைகளுக்காக பாடசாலைகள் ஆரம்பம் !

புதிய ஆண்டில் பாடசாலை முதலாம் தவணை நாளை ஆரம்பமாகிறது. அதேவேளை கல்விப் பொதுத்தராதர பத்திர சாதாரணதரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் இரண்டு கட்டமாக மேற்கொள்ளப்படுவதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்துள்ளார்.
முதலாம் கட்டம் இன்று ஆரம்பமாகி எதிர்வரும் 13 ஆம் திகதி நிறைவடையும். இரண்டாம் கட்டம் எதிர்வரும் 23 ஆம் திகதி ஆரம்பமாகி அடுத்த மாதம் 3 ஆம் திகதி முடிவடையும். முதலாம் கட்டமாக விடைத்தாள் திருத்தும் பணி மேற்கொள்ளப்படும்இ 58 பாடசாலைகள் முற்றாக மூடப்பட்டிருக்கும்.
அவற்றில் எதிர்வரும் 15 ஆம் திகதி முதலாம் தவணை ஆரம்பமாகும். இரண்டாம் கட்ட விடைத்தாள் திருத்தும் பணிக்காக பயன்படுத்தப்படும் 26 பாடசாலைகள் பகுதியளவில் மூடப்பட்டிருக்கும். அவற்றில் முதலாம் தவணை திட்டமிட்டபடி நாளை ஆரம்பமாகும்.
Related posts:
ரோந்து பணிகளை அதிகரிக்குமாறு கோரிக்கை!
2024 ஆம் ஆண்டு அனைத்து அரச நிறுவனங்களிலும் இலத்திரனியல் முறையில் கொள்வனவுகளை மேற்கொள்ள திட்டம் - நி...
அச்சுவேலி வல்லையில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட குடும்ப பெண் கைது!
|
|