மீண்டும் டெங்கு அபாயம் – அதிகளவு நோயாளர்கள் மேல் மாகாணத்தில் பதிவு – சூழலை பாதுகாப்பாக பேணுமாறு சுகாதார தரப்பினர் வலியுறுத்து!

Wednesday, October 27th, 2021

தற்போது நிலவும் மழையுடன் கூடிய காலநிலை காரணமாக டெங்கு பரவல் அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.

இம்மாதம் கடந்த 26 நாட்களில் 2 ஆயிரத்து 228 டெங்கு நோயாளர் கள் பதிவாகியுள்ளதாகவும் இதில் அதிகளவானோர் மேல் மாகாணத்தில் பதிவாகியுள்ளதாகவும் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதன்படி இந்த மாதம் கொழும்பு மாவட்டத்தில் 856 பேரும், கம்பஹாவில் 476 பேரும், களுத்துறை மாவட்டத்தில் 209 பேரும் டெங்கு நோயாளர்களாகப் பதிவாகியுள்ளனர்.

கம்பஹா மாவட்டத்தில் டெங்கு நோய் பரவல் அதிகரித் துள்ள நிலையில் நீர்கொழும்பு வைத்தியசாலையின் டெங்கு மற்றும் டெங்கு இரத்தப்போக்கு முகாமைத்துவ விசேட வார்டுகளிலுள்ள 21 படுக்கைகளும் தற்போது நோயாளர்களால் நிரம்பியுள்ளதாகத் தெரிவிக்கப் படுகின்றது.

டெங்கு அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவ சிகிச்சை பெறுமாறு தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின் சமூக மருத்துவர் ஷிரந்தி செனவிரத்ன வலியுறுத்தியுள்ளார்.

உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் வீடுகள் மற்றும் வளாகங்களில் சோதனைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், நுளம்புகள் பெருகும் இடங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப் படவுள்ளதாகவும் பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts:


அவசியமற்ற பயணங்களை மேற்கொள்ள பொதுப் போக்குவரத்தை பயன்படுத்த வேண்டாம் - போக்குவரத்து முகாமைத்துவ அமை...
குற்றச்சாட்டுகள் உரிய விசாரணைகள் மூலம் நிரூபிக்கப்பட்டால் தராதரம் பாராது தண்டனை வழங்கப்படும் - வர்த்...
அணிசேரா நாடுகளின் மாநாடு உள்ளிட்ட பல்வேறு மாநாடுகளில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி ரணில் உகண்டா வியஜம் – ...