மீண்டும் கார்களின் விலைகள் அதிகரிப்பு!
Wednesday, August 1st, 2018
1000CC இற்கு குறைந்த சாதாரண மோட்டார் வாகனங்கள் மற்றும் ஹைப்ரிட் வாகனங்களுக்கான உற்பத்தி வரியினை அதிகரிக்க நிதி அமைச்சு தீர்மானித்துள்ளது.
கடந்த காலங்களில் இலங்கைக்கு இந்த மோட்டார் வாகனங்கள் அதிகளவு இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாலேயே நிதி அமைச்சு மேற்கண்ட தீர்மானத்தினை எட்டியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதற்கமைய சாதாரண 1000CC இற்கு குறைந்த வாகனங்களுக்கு முன்னர் 14 இலட்சம் ரூபா வரி அறவிடப்பட்டிருந்த நிலையில் புதிய வரியாக 15 இலட்சம் ரூபா அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், 1000CC ஹைப்ரிட் கார்களுக்கான வரியானது இதற்கு முன்னர் 8.5 இலட்சமாக இருந்த நிலையில் தற்போது 12.5 இலட்சம் ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
Related posts:
சட்டவிரோத மணல் அகழ்வு - வடமராட்சி கிழக்கில் துப்பாக்கி சூடு!
விமர்ச்சிப்பதை விடுத்து உண்மைத் தன்மையை புரிந்து கொண்டு அனைவரும் செயற்பட வேண்டும் - ஓட்டமாவடி பிரதேச...
இந்திய வம்சாவழி தமிழ் மக்களை, 'இலங்கை தமிழர்' என அடையாளப்படுத்த முற்படுவது அடையாளத்தை மறைக்கும் செயல...
|
|
|


