மீண்டும் கராச்சிக்கான விமான சேவை ஆரம்பம்!

பாகிஸ்தானின் வர்த்தக தலைநகரான கராச்சிக்கான பயணத்தை ஸ்ரீலங்கன் விமான சேவை இன்று மீண்டும் ஆரம்பிக்கவிருக்கிறது.
இரு நாடுகளுக்கிடையிலான இந்த விமான சேவை வாரத்தில் ஐந்து நாட்களுக்கு இடம்பெறுகின்றன. செவ்வாய் வியாழன் வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் சேவைகள் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.
பாகிஸ்தானுக்கான பல்வேறு விமான சேவைகள் கடந்த பெப்ரவரி மாதம் 27 ஆம் திகதி தற்காலிகமான இடை நிறுத்தப்பட்டன.
இடைநிறுத்தப்பட்ட சேவை மீண்டும் இன்று ஆரம்பமாகிறது. ஸ்ரீலங்கன் விமான சேவை ஆயிரத்திற்கும் அதிகமான நகரங்களுக்கு விமான சேவையை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
பரீட்சை அனுமதி அட்டைகளை விரைவில் வழங்குமாறு அறிவிப்பு!
தமிழ்க் கைதிகளை அரசாங்கம் வேண்டுமென்றே தடுப்புக்காவலில் வைக்கவில்லை - அவர்கள் மீது கடுமையான குற்றச்...
சரியான நேரத்தில் தகுதியான ஒவ்வொருவருக்கம் தடுப்பூசி வழங்கப்படும் - இராணுவத் தளபதி உறுதி!
|
|