மீண்டும் கடும் மழைக்கு சாத்தியம்!

அடுத்த சில நாட்களுக்கு நாடு முழுவதும் வடகிழக்கு பருவமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக காலநிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக நாட்டின் பல பிரதேசங்களில் மாலை நேரங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக அந்த நிலையம் கூறியுள்ளது.
மேல், சப்ரகமுவ மாகாணங்கள் மற்றும் காலி, மாத்தறை மாவட்டங்களில் 75 மில்லிமீற்றருக்கு அதிகமான கடும் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக கூறப்பட்டுள்ளது.
மழை தொடர்ந்து பெய்யும் பட்சத்தில் மண்சரிவு, மண்மேடு இடிந்து விழுதல், பாறைகள் புரளுதல் போன்றன தொடர்பில் அவதானத்துடன்; செயற்படுமாறு கட்டட அமைப்பு பொதுமக்களுக்கு அறிவித்துள்ளதாக அரச தகவல் திணைக்களம் கூறியுள்ளது.
காலி, களுத்துறை ஆகிய பிரதேசங்களில் சில இடங்களில் மண்சரிவு அனர்த்த எச்சரிக்கை விடுவிக்கப்பட்டுள்ளது.
மின்னல் தாக்கம் குறித்தும் அவதானமாயிருக்குமாறும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
Related posts:
|
|