மீண்டும் எரிபொருள் விலை அதிகரிப்பு? – அமைச்சர் மங்கள!

புதிய எரிபொருள் விலைச் சூத்திரம் எதிர்வரும் 10ஆம் திகதி வரும் என்றும், அதற்கு அனைவரும் தயாராக வேண்டும் என்று நிதி அமைச்சர் மங்கள சமரவீர இன்று பகிரங்க அறிவித்தல் விடுத்துள்ளார்.
கொழும்பு ரோயல் கல்லூரியில் இன்று நடந்த நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அவர் தெரிவித்துள்ளதாவது-
உலக சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை அதிகளவு அதிகரித்துள்ளது. ஒரு பீப்பா மசகு எண்ணெய் 80 டொலர் வரை உயர்ந்துள்ளது. இதன் தாக்கம் உள்நாட்டிலும் இருக்கும்.
அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையிலான முரண்பாடு அதிகரித்தால் ஒரு பீப்பா மசகு எண்ணெய்யின் விலை 100 டொலரையும் தாண்டி விடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.- என்றார்.
Related posts:
ஜனாதிபதி பிரதமருக்கு நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை!
அரியாலை மத்தி - தெற்கு பகுதி மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி அவ...
பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் கால அவகாசம் நாளையுடன் நிறைவு - பல்கலைக்கழக மானி...
|
|