மீண்டும் எதிரொலிக்ககும் 25,000 ?

Monday, December 5th, 2016

நாடுமுழுவதிலும் தாம் வசிக்கும் சூழலில் நுளம்பு குடம்பிகள் கொண்டிருப்பவர்களுக்கு எதிராக 25 ஆயிரம் ரூபா அபராதப் பணமாக விதிக்க திட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது என சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

டெங்கு நோயை இல்லாதொழிக்க வேண்டுமாயின் இந்த சட்டம் கட்டாயப்படுத்த வேண்டும் என அமைச்சர் கூறியுள்ளார்.

ஒரு பகுதியிலிருந்து டெங்கு நோய் காரணமாக ஒருவர் உயிரிழந்தார் என்றால், டெங்கு நுளப்பு குடம்பியை பரவலடையச் செய்தவர் அல்லது குறித்த பகுதியில் நிறுவனம் வைத்திருப்பவர்கள் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் ராஜித குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இந்த வருடத்தில் டெங்கு நோய் காரணமாக 47 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 76 பேர் உயிரிழந்துள்ளதாகவும் சுகாதார அமைச்சின் டெங்கு ஒழிப்பு பிரிவு விசேட நிபுணர் வைத்தியர் பிரிசில்லா சமரவீர தெரிவித்துள்ளார்.

டெங்கு ஒழிப்பு நிகழ்ச்சி திட்டம் டிசம்பர் 07ஆம் திகதி முதல் 9 ஆம் திகதி வரையில் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் சுகாதார அமைச்சின் டெங்கு ஒழிப்பு பிரிவு விசேட நிபுணர் கூறியுள்ளார்.நுளம்பு பெருக்கத்திற்கு ஏற்ற சூழலை கொண்டிருப்பவர்களுக்கு, தற்போது 500 ரூபா முதல் 2000 ரூபா வரையில் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

650px-Aedes_aegypti_feeding

Related posts: