மீண்டும் இலங்கை விவகாரம் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில்!

2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 21ஆம் திகதி ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்தினால் விளக்கமளிப்பு நிகழ்வுஇடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மார்ச் மாதம் இலங்கை அரசாங்கத்துக்கு யுத்தகால பிரச்சினைகளை தீர்ப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக 2 வருட கால அவகாசம் வழங்கும் தீர்மானம் மனிதஉரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்டது.
இத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஒருவருட காலத்தில் இலங்கை அரசாங்கம் கண்டுள்ள முன்னேற்றங்கள் தொடர்பில் மனித உரிமைகள் ஆணையாளரது அலுவலகம்விளக்கமளிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அன்றையதினம் மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்தின் இலங்கை தொடர்பான அறிக்கை ஒன்றும் முன்வைக்கப்படவுள்ளது.
Related posts:
ஒரு நாள் சேவை இன்று முன்னெடுக்கப்பட மாட்டாது!
யாழ்.பல்கலைக்கழகம் வந்தார் அமைச்சர் சுவாமிநாதன்!
மின்சார கட்டணம் குறைப்பு - உணவு பொருட்களின் விலைகளை குறைப்பதற்கு இலங்கை சிற்றுண்டிச்சாலை மற்றும் உ...
|
|