மின் விநியோகத்திற்கு பாதிப்பில்லை!

நிலவும் வரட்சியான காலநிலை எதிர்வரும் 10ம் திகதிக்கு பின்னர் மாற்றமடையலாம் என வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.
நாட்டில் எதிர்வரும் காலங்களில் மழை பெய்யக் கூடும் என எதிர்பார்ப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. இதேவேளை, வரட்சியான காலநிலை காரணமாக மின் விநியோகத்திற்கு பாதிப்பு ஏற்படுமா என மின் சக்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சிடம் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில்
தற்போது மின் உற்பத்தி நிலையங்களுக்கு அருகிலுள்ள நீர்த் தேக்கங்களில் நீர் மட்டம் நூற்றுக்கு 53 வீதம் காணப்படுவதாக, அமைச்சின் ஊடகப் பேச்சாளர் சுலக்ஷன ஜெயவர்த்தன குறிப்பிட்டுள்ளார். எனவே மின் விநியோகத்திற்கு பாதிப்பு ஏற்படாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
Related posts:
டெங்கு நோய்த்தொற்றை தடுக்க துரித நடவடிக்கை - யாழ். பொலிஸார்!
அத்தியாவசிய பொருட்களின் விலை குறையும்?
ஊரடங்கு தொடர்ந்தாலும் மருந்தகங்கள் திறந்திருக்கும் - சுகாதார அமைச்சு!
|
|