மின்னல் தாக்கி 17 வயது சிறுவன் பலி – விசுவமடு தொட்டியடியில் துயரம்!
Saturday, April 20th, 2019
முல்லைத்தீவு – விசுவமடு தொட்டியடி பகுதியில் நேற்று பிற்பகல் மின்னல் தாக்கியதில் 17 வயது பாடசாலை மாணவன் உயிரிழந்துள்ளார்.
மழைக்காக நாவல் மரத்தின் கீழ் ஒதுங்கி நின்ற நிலையில், மரத்தின் மீது விழுந்த மின்னல் சிறுவார்கள் மீது தாக்கியுள்ளது.
சம்பவத்தில் தர்மபாலசிங்கம் தயானந்தன் (வயது-17) என்ற பாடசாலை சிறுவனே உயிரிழந்துள்ளான்.மேலும் எஸ்.கிருஷாந்தன் என்ற சிறுவன் காயமடைந்துள்ளான்.
உயிரிழந்தவரின் சடலம்தற்போது கிளிநொச்சி, தர்மபுரம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
Related posts:
பல்கலைக்கழகங்கள் வெறுமனே பட்டங்களை வழங்கும் நிறுவனங்களாக இருக்க முடியாது - ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச...
கடந்த 17 நாட்களில் சிறைச்சாலைகளிலிருந்து 7,479 பேர் விடுதலை!
கொரோனா தடுப்பூசியை ஏற்றிக்கொள்வதற்கு அச்சம் கொள்ள தேவையில்லை - இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி தெரிவிப்பு...
|
|
|


