மின்னல் தாக்கி மூவர் பலி – யாழில் சோகம்!
Wednesday, April 17th, 2019
யாழ்ப்பாணம், குப்பிளான் தெற்கு பகுதியில் நேற்று(16) மின்னல் தாக்கியதில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.
குறித்த பகுதியில் உள்ள புகையிலைத் தோட்டம் ஒன்றில் வேலை செய்துகொண்டிருந்த ஆண் ஒருவரும் இரு பெண்களும், இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்தவர்களின் சடலம் பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த சம்பவம் தொடர்பில் சுன்னாகம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Related posts:
யாழ் . குடாநாட்டின் சிலவிடங்களில் நாளை மின் தடை!
இலங்கையில் புதிய இரண்டு வகை நுளம்பு இனங்கள் கண்டுபிடிப்பு !
பாடசாலைகளை ஆரம்பிப்பது தொடர்பில் கல்வி அமைச்சு தகவல்!
|
|
|


