மின்சார விநியோகம், வைத்தியசாலை உள்ளிட்ட சில சேவைகள் அத்தியாவசிய சேவைகளாக பிரகடனம் – ஜனாதிபதியால் அதிவிசேட வர்த்தமானியும் வெளியீடு!

மின்சார விநியோகம், வைத்தியசாலை உள்ளிட்ட மேலும் சில சேவைகளை அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தும் அதிவிசேட வர்த்தமானி ஜனாதிபதியினால் வெளியிடப்பட்டுள்ளது.
ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்திற்கு அமைய இந்த அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதற்கமைய மின்சார விநியோகம், வைத்தியசாலை, முதியோர் இல்லங்கள், மருந்தகங்கள், நோயாளர் பராமரிப்பு சேவைகள் மற்றும் சிகிச்சை ஆகியவை தொடர்பிலான அனைத்து அவசியமான சேவைகள் மற்றும் தொழில்கள் அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
விஜயகலாவுக்கு புனர்வாழ்வு வழங்க வேண்டும் என சொல்கிறார் முன்னாள் இராணுவ தளபதி!
300 புகையிரதங்கள் இருந்தாலும் 130 புகையிரதங்களே சேவையில் - புகையிரத இயந்திர சாரதிகள் சங்கத்தின் குற்...
நாட்டின் பொருளாதாரம் எதிர்மறை வளர்ச்சியை காட்டுவதாக மத்திய வங்கி ஆளுனர் தெரிவிப்பு!
|
|