மின்சார வசதியற்ற வீடுகளுக்கு இந்த வருடத்திற்குள் மின்சாரம் – அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல உறுதி!
Monday, March 22nd, 2021
ஒரு இலட்சம் குடும்பங்களுக்கு மின்சார இணைப்பை வழங்கும் வேலைத்திட்டம் தற்போது முன்னெடுக்கப்படுவதாக வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
50 ஆயிரம் சமுர்த்திக் குடும்பங்களும், குறைந்த வருமானம் பெரும் 25 ஆயிரம் குடும்பங்களும் இதற்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
இதன்மூலம் மக்களின் நாளாந்த வாழ்க்கையை சீரான முறையில் பேண முடியும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
சுபீட்சத்தின் தொலைநோக்கு தேசிய கொள்கைப் பிரகடனத்திற்கு அமைய தேசத்திற்கு ஒளி என்ற நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.
அத்துடன் கொரோன தொற்றுக்கு மத்தியிலும் மக்களின் நலனைக் நோக்காகக் கொண்டு தொடர்ந்தும் நிவாரணம் வழங்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
வேலைவாய்ப்பு வழங்கலில் வடக்கு - கிழக்கு உள்வாங்கப்படும் விகிதாசாரம் என்ன? - டக்ளஸ் தேவானந்தா கேள்வ...
வாகன விபத்துக்களை தடுக்க விழிப்புணர்வு நடவடிக்கை : வடமாகாண ஆளுநர் கூரே!
டொலர் பற்றாக்குறையே அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்ய முடியாமைக்கு காரணம் - மத்தியவங்கி ஆளுநர் த...
|
|
|


