மின்சார தேவையை பூர்த்தி செய்ய அரசு நடவடிக்கை!
Tuesday, January 3rd, 2017
அவசர மின்சாரத் தேவையொன்று நாட்டில் ஏற்படுமாயின், அதற்கு முகங்கொடுக்கும் வகையில் 60 மின் உற்பத்தி இயந்திரங்களை கொள்வனவு செய்வது குறித்து இலங்கை மின்சார சபை கவனம் செலுத்தியுள்ளது.
நாட்டில் நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக நீர் மின்சாரம் உற்பத்தி செய்யும் நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் குறைவடைந்து வருகின்றது. இந்நிலையில், மின்சாரத் துண்டிப்பைத் தவிர்ப்பதற்காக மின்சார உற்பத்தி இயந்திரங்களைக் கொள்வனவு செய்ய இலங்கை மின்சார சபை தீர்மானித்துள்ளது.
இதற்கான யோசனை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக மின்சாரத்துறை அமைச்சின் செயலாளர் சுரேன் பத்தகொட தெரிவித்துள்ளார். இதற்கமைய ஆறு மாதங்களுக்கான மெகா வோல்ட் மின் உற்பத்தி செய்யக்கூடிய 60 இயந்திரங்களை கொள்வனவு செய்யவுள்ளதாக அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts:
பிரதேச செயலாளர் பதவிக்கு 40 வெற்றிடங்கள்!
உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை மீண்டும் உயர்வு!
அமைச்சர்கள் எவருக்கும் சம்பளம் வழங்கப்பட மாட்டாது – பிரதமர் ரணில் அதிரடி அறிவிப்பு!
|
|
|


