மின்சார சபை மீது கடுப்பான சங்கக்கார!
Friday, December 8th, 2017
இலங்கை மின்சார சபையின் செயற்பாடு தொடர்பில் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார அதிருப்திவெளியிட்டுள்ளார்.
கொழும்பு உள்ளிட்ட பல பகுதிகளில் அண்மையில் ஏற்பட்ட சீரற்ற காலநிலையால் மின்சாரம் தடைப்பட்டது. இதன்போது கொழும்புமின்சார சபை அலுவலகத்தினை தொடர்பு ஏற்படுத்திய போதும் பதில் கிடைக்கவில்லை என குமார் சங்கக்கார அதிருப்திவெளியிட்டுள்ளார். தனது டுவிட்டர் பக்கத்தில் இது குறித்து சங்கக்கார பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் மின்சார சபையை தொடர்பு கொள்ளமுடிந்த ஒருவரேனும் இருக்கின்றீர்களா எனக் கேட்டுள்ளார். இதற்கு பலர் பதிலளித்துள்ளனர்.ஆயினும் கடந்த 4ஆம் திகதி மின்சாரம் வழமைக்கு திரும்பியமை குறித்து தனது நன்றியையும் அவர் தெரிவித்துள்ளார்.
Related posts:
ஜனாதிபதியை சந்திக்கும் தேசிய சம்பள ஆணைக்குழு உறுப்பினர்கள் !
கடத்தல்காரர்களே அரசாங்கத்தை மாற்ற முயற்சிக்கின்றார்கள் - அமைச்சர் பிரசன்ன ரணதுங்க சுட்டிக்காட்டு!
ஆன்மீக ரீதியிலான சிறுவர் தலைமுறையை உருவாக்கும் வகையில் சமயக் கல்வியை மேம்படுத்தும் பல்வேறு வேலைத்திட...
|
|
|


