மின்சார சபை பெற்றோலியத் திணைக்களத்திற்கிடையில் இணக்கப்பாடு!
Tuesday, July 9th, 2019
இலங்கை மின்சார சபை மற்றும் பெற்றோலியக் கூட்டுத்தாபன உயர் அதிகாரிகளுக்கு இடையில் இன்று(09) இடம்பெற்ற பேச்சுவார்த்தை வெற்றி அளித்துள்ள நிலையில், மின்சார சபைக்கு எரிபொருள் வழங்க பெற்றோலிய திணைக்களம் இணக்கம் தெரிவித்துள்ளது.
இதனை அடுத்து இன்று முதல் மின் தடை ஏற்படாது என தெரிவிக்கப்படுகிறது.
இலங்கை மின்சார சபையினால் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு வழங்க வேண்டி இருந்த ஒரு பில்லியன் ரூபா பணத்தை செலுத்த தாமதமானமையினால் மின்சார சபைக்கு எரிபொருள் வழங்குவது மட்டுப்படுத்தப்பட்டு நேற்று(08) நாட்டின் பல இடங்களில் மின் தடை ஏற்படுத்தப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
Related posts:
சாதாரண தர பரீட்சை விடைத்தாள் சரிபார்க்கும் பாடசாலைகள்!
வெளிநாடுகளில் நிர்க்கதியாகியுள்ள இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்துவருவதற்கு புதிய திட்டம் - ஜனாதிபதி ஊ...
அடுத்த வாரமும் பாடசாலைகளுக்கு விடுமுறை - 18 ஆம் திகதிமுதல் பாடசாலைகளை ஆரம்பித்து நடத்துவதற்கு கல்வி ...
|
|
|


