மின்சார சபையை மறுசீரமைப்பதற்கான முன்மொழிவுகள் உள்ளடக்கிய புதிய மின்சார சட்ட மூலம் வர்த்தமானியில் வெளியானது!
Friday, December 8th, 2023
இலங்கை மின்சார சபை, அதனை மறுசீரமைப்பதற்கான முன்மொழிவுகள் உள்ளடக்கிய புதிய மின்சார சட்ட மூலம் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது.
இதில், ஐந்து உறுப்பினர்களை உள்ளடக்கிய தேசிய மின்சார ஆலோசனை சபையொன்றை நிறுவுவதற்கு முன்மொழியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
உறுப்பினர்களை அமைச்சர் சபையின் ஒப்புதலுடன் அமைச்சரே நியமித்து அவர்களில் ஒருவர் தலைவராக நியமிக்கப்படுவார்.
அத்துடன் இந்த நாட்டில் மின்சார உற்பத்தி, பரிமாற்றம், விநியோகம், வர்த்தகம், வழங்கல் மற்றும் கொள்வனவு நடவடிக்கைகளை மறுசீரமைப்பதற்கும் இந்த சட்டமூலத்தில் முன்மொழியப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த சட்டமூலத்துக்கு கடந்த மாதம் 20 ஆம் திகதி அமைச்சர்கள் குழுவும் ஒப்புதல் அளித்தமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
பொருத்து வீடுகள் பெறுவதற்கு தென்மாராட்சி மக்கள் ஆர்வம்!
எழுத்து மூல உறுதி மொழி வழங்கப்படாமையால் தொடரும் போராட்டம் !
கடன் நெருக்கடியில் இருந்து விடுபட இலங்கைக்கு ஆதரவளிக்கப்படும் - வெளிவிவகார அமைச்சரிடம் சர்வதேச அரச ...
|
|
|


