மின்சார சபையில் பணியாற்றும் 24,000 ஊழியர்களின் சேவைத்திறன் தொடர்பில் சிக்கல் – மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவிப்பு!

இலங்கை மின்சார சபையில் பணியாற்றும் 24,000 ஊழியர்களின் சேவைத்திறன் தொடர்பில் சிக்கல்கள் இருப்பதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
நேற்றையதினம் இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்விலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இதன் காரணமாக மின்சார சபை மறுசீரமைப்பின் போது அந்த 24,000 ஊழியர்களையும் குறைக்க வேண்டிய நிலை ஏற்படும் எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதற்கமைய, மின்சார சபையின் மறுசீரமைப்பு தொடர்பான சட்டமூலம் அடுத்த மாதம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, சட்டமா அதிபர் திணைக்களத்தின் அனுமதியின் பின்னர் குறித்த சட்டமூலம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் எனவும் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள்!
தங்கத்துடன் யாழ்ப்பாணத்து பெண்கள் கைது!
கோழி இறைச்சியின் விலை நிர்ணயம்!
|
|