மின்சார சபைக்கு 228 மில்லியன் ரூபா நஷ்டம்!

நாட்டில் நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக இலங்கை மின்சார சபைக்கு 228 மில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
மின்சக்தி மற்றும் புதுப்பிக்கதக்க சக்தி அமைச்சின் ஊடக பேச்சாளர் சுலக்ஷன ஜயரவர்தன இதனை தெரிவித்துள்ளார் மழையுடனான காலநிலையின் போது மாத்தறை மின்சார உபநிலையங்களுக்கு ஏற்பட்ட சேதங்களே இதற்கான காரணம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்
இதேபோன்று பல பிரதேசங்களில் ஏற்பட்ட மண்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக, மின் உபநிலையங்கள் மற்றும் மின் மாற்றிகள் என்பன சேதப்பட்டுள்ளதாகவும் சுலக்ஷன ஜயரவர்தன தெரிவித்துள்ளார்
Related posts:
சாதாரண தரப் பரீட்சை முடிவுகள் வெளியீடு செய்வது தாமதமாகும் – பரீட்சை ஆணையர் அறிவிப்பு!
கிராமிய வீதிகள், அதனுடன் தொடர்புடைய விவசாய சேவைகளை மேம்படுத்துவதற்காக உலக வங்கியிடமிருந்து 500 மில்ல...
இந்தியாவினால் வழங்கப்படும் நிதியுதவி தொடர்பிலான ஒப்பந்தங்களை நிறைவுசெய்வதற்கு நிதியமைச்சர் பஷில் மீண...
|
|