மின்சாரம் வழங்கும் திறன் தங்களிடம் உள்ளது – மின்வெட்டு இடம்பெறாது கட்டணமும் அதிகரிக்காது – அமைச்சர் காமினி லொகுகே உறுதிபடத் தெரிவிப்பு!

நாடளாவிய ரீதியில் மின்சாரம் துண்டிக்கப்படாது என்றும் தொடர்ந்தும் மின் விநியோகம் மேற்கொள்ளப்படும் என்றும் அமைச்சர் காமினி லொகுகே உறுதியளித்துள்ளார்.
இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அமைச்சர், மின்சார விடயத்தில் எந்தப் பிரச்சினையும் ஏற்படப் போவதில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை மின்சாரம் வழங்கும் திறன் தங்களிடம் உள்ளது என்றும் மின்சாரத்திற்கான கட்டணத்தையும் உயர்த்த மாட்டோம் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்..
சபுகஸ்கந்த மூடப்பட்டுள்ளது, ஆனால் இந்த ஆண்டு நாங்கள் 50% நீர் மூலமும் 50% நிலக்கரி மூலமும் மின்சாரத்தை உற்பத்தி செய்வதாகவும் அவர் கூறியுள்ளார்.
கடந்த வருடம் மின்சாரத்தினால் ஏற்பட்ட இழப்பு 35 பில்லியன் ரூபாயாக இருந்த போதிலும் அதனை 5 பில்லியனாக குறைத்துள்ளதாகவும் அமைச்சர் காமினி லொகுகே இதன்போது சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது..
000
Related posts:
|
|