மின்சாரத்தை மிக சிக்கனமாக பயன்படுத்தவும் – மின்சக்தி அமைச்சர்!

தற்போதைய வரட்சி நலைமையை கருத்தில்கொண்டு மின்சாரத்தை மிக சிக்கனமாக பயன்படுத்தி செலவீனத்தை குறைத்து தேசிய வேலைத்திட்டம் வெற்றிபெறுவதற்கு உதவி செய்யுமாறு மின்சக்தி அமைச்சர் ரஞ்சித் சியம்பலப்பிட்டிய பொதுமக்களை கேட்டுள்ளார்.
இலங்கையில் 40 வீதத்திற்கும் அதிகமான மின்சாரம் நீர்மின் உற்பத்தி மூலம் பெறப்படுகிறது. இருந்த போதிலும், இலங்கைக்கு கிடைக்கின்றன மூன்று பருவகால மழை வீழ்ச்சிகளும் எதிர்பார்த்த பலனை தரவில்லை. அதனால் நீர்மின் உற்பத்தி நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் 32 வீதம் வரை குறைவடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அதிக வெப்பம் காரணமாக நாடாளவிய ரீதியில் பகல் வேளையில் மின்சாரத்தின் தேவை 18 வீதத்தால் அதிகரித்துள்ளது. அதேவேளை இரவு நேரங்களில் மின்சாரத்தின் தேவை மேலும் பத்து வீதத்தால் அதிகரித்துள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
Related posts:
ரயில் கட்டணங்கள் அதிகரிப்பு!
வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸின் அழைப்பின் பேரில் இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்ஷங்க...
பிரதேச சபைகளின் முன்னாள் உறுப்பினர்க உறுப்பினர்கள் பிரசன்னத்துடன் நடைபெற்ற சிறு நிதியில் பிரதேசங்களி...
|
|