மித மிஞ்சிய வகையில் மிரட்டினால் மாற்று நடவடிக்கை எடுக்கப்படும் – நிதி அமைச்சர்!
Wednesday, January 4th, 2017
லொத்தர் சீட்டு விற்பனை முகவர்கள் மித மிஞ்சிய வகையில் அரசாங்கத்தை மிரட்டினால் மாற்று நடவடிக்கை எடுக்க நேரிடும் என நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
அலரி மாளிகையில் நேற்று முன்pனம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அதிகமாக சண்டித்தனம் காட்டினால் இன்னும் ஒன்றிரண்டு நாட்களில் புதியவர்களுக்கு லொத்தர் சீட்டு விற்பனைக்கான அனுமதிப்பத்திரம் வழங்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார். ஏற்கனவே விற்பனை செய்வதற்காக அனுமதி கோரி காத்திருக்கும் பட்டியலில் உள்ள விண்ணப்பதாரிகளுக்கு இந்தச் சந்தர்ப்பம் வழங்கக்கடும் என அவர் தெரிவித்தார். வடக்கு, கிழக்கு உள்ளிட்ட நாட்டின் ஏனைய அனைத்து பகுதிகளிலும் லொத்தர் சீட்டு விற்பனை செயய அனுமதியளிக்குமாறு கோரிக்கைகள் விடுக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

Related posts:
பொதி செய்யப்பட்ட நிலையில் வெடிபொருட்கள் – செம்மணியில் தேடுதல்!
யாழ் மாவட்டத்தில் பொதுமக்களுக்கு 72 வீதமும் அரச உத்தியோகத்தர்களுக்கு 28 வீதமும் எரிபொருள் விநியோகம்!
பொருளாதார நெருக்கடிக்கு சட்டத்தின் ஆதிக்கம் சீர்குலைந்தமையும் காரணம் - நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச...
|
|
|


