மிதிவெடிகளை அகற்றி விரைவாக மீள்குடியேற்றம் செய்யுங்கள் – முகமாலை மக்கள் கோரிக்கை!

Thursday, May 10th, 2018

கிளிநொச்சி பச்சிலைப்பள்ளியின் முகமாலை, இந்திராபுரம், இத்தாவில் கிராமங்களில் மீள்குடியேற்றம் செய்யப்படாத பகுதிகளில் மிதிவெடிகளை அகற்றி விரைவாக மீள்குடியேற்றம் செய்யுமாறு மேற்படி பகுதிகளைச் சேர்ந்த மக்கள் கேட்டுக்கொள்கின்றனர்.

கடந்த 20 ஆண்டுகளாக மேற்படி கிராமங்களிலிருந்து இடம்பெயர்ந்து உறவினர் வீடுகளிலும் வாடகை வீடுகளிலும் நெருக்கடிகளுக்கு மத்தியில் வாழ்ந்து வருகின்றனர். நாட்டில் போர் இல்லாத சூழலிலும் அகதி வாழ்வு தொடர்கின்றது.

நாங்கள் கலந்து கொள்கின்ற அனைத்துக் கூட்டங்களிலும் மிதிவெடிகள் அகற்றப்படுகின்றன என்று சொல்லி காத்திருக்க வைக்கின்றார்களே தவிர மிதிவெடிகளை விரைவாக அகற்றி மீள் குடியேற்ற முயற்சிகளை மேற்கொள்ளவில்லையென மேற்படி பகுதிகளில் மீள்குடியேற காத்திருக்கும் மக்கள் தெரிவிக்கின்றனர்.

கடந்த 4 ஆம் திகதி பச்சிலைப்பள்ளி பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் 194 குடும்பங்கள் மேற்படி கிராமங்களில் மீள் குடியேற பதிவுகளை மேற்கொண்டுள்ளதாக பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் தெரிவித்திருந்தார்.

Related posts: