மாலைத்தீவுக்கு அருகில் இன்றுகாலை நான்கு நில அதிர்வுகள் பதிவு – புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியகம் தகவல்!

இந்தியப் பெருங்கடலின் மாலைத்தீவுக்கு அருகில் இன்று காலை நான்கு நில அதிர்வுகள் பதிவாகியுள்ளதாக புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.
ரிக்டர் அளவுகோலில் 4.8 மெக்னிடீயுட்டாக முதலாவது நில அதிர்வும், 5.8 மெக்னிடீயூட்டாக இரண்டாவது நில அதிர்வும் பதிவாகியுள்ளதாக அந்த பணியகம் குறிப்பிட்டுள்ளது.
அத்துடன், ரிக்டர் அளவுகோலில் 5.2 மற்றும் 5.0 மெக்னிடியூட் அளவிலான மேலும் இரண்டு நில அதிர்வுகளும் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், அழிப்பேரலை எச்சரிக்கை விடுக்கப்படவில்லை என்பதுடன், இதனால் இலங்கைக்கு எவ்வித பாதிப்பும் இல்லை என புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியகம் குறிப்பிட்டுள்ளது
000
Related posts:
யாழ். பல்கலையில் குறுகியகால கற்கை நெறிக்கு விவசாயிகள் தெரிவு!
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் இந்தியா செல்கிறார் அமைச்சர் ஜீவன் தொண்டமான்!!
சிறைச்சாலையில் 65 வீதமானவர்கள் போதைப்பொருள் பாவனை தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டவர்கள் - சிறைச்சாலை...
|
|