மாலபே மருத்துவக் கல்லூரிக்கு எதிராக வகுப்புப் பகிஷ்கரிப்பு: பல்கலை மாணவர்களுக்கு அழைப்பு!

மாலபே தனியார் மருத்துவக் கல்லூரிக்கு எதிராக ஒரு நாள் வகுப்புப் பகிஷ்கரிப்பை மேற்கொள்ளுமாறு அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர் அழைப்பு விடுத்துள்ளனர்.
மாலபே தனியார் மருத்துவக் கல்லுரி அரசாங்க அனுமதியுடன் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. குறித்த தனியார் மருத்துவக் கல்லூரிக்கு அரசாங்கம் வழங்கியுள்ள அனுமதியை இரத்துச் செய்யும்படியும் தனியார் மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கு அரச வைத்தியசாலைகளில் பயிற்சி பெறுவதற்கான அனுமதியை இரத்துச் செய்யும்படியும் பல்கலைக்கழக மாணவர்களால் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில் யாழ்ப்பாணத்தில் பரவலான இடங்களில் கல்வி, சுகாதாரம் விற்பனை செய்வதற்கு எதிராக ஒருநாள் வகுப்புப் பகிஷ்கரிப்பை மேற்கொள்ளும்படியும் மாலபே திருட்டுப் பட்டக்கடையை இரத்துச் செய்யும்படியும் அனைத்துப் பல்கலைக்கழக மாணவர்களால் தமிழ், சிங்கள மொழிகளில் சுவரொட்டிள் ஒட்டப்பட்டுள்ளன.
குறித்த வகுப்புப் பகிஷ்கரிப்பை ஜனவரி மாதம் 11 ஆம் திகதி மேற்கொள்ளும்படியும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Related posts:
|
|