மார்ச் 11ஆம் திகதி கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா !
Monday, February 27th, 2017
கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழா மார்ச் 11ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாவுள்ளது.
இதன்போது தமிகத்திலிருந்து கச்சத்தீவு செல்வதற்கு 145 விசைப்படகுகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஒரு படகில் ஊழியர்கள் உட்பட 35 பேர் மட்டுமே பயணிப்பதற்கு அரசு அனுமதி அளித்துள்ளதால், ஆண்கள் 3610, பெண்கள் 1118, குழந்தைகள் 263 பேர் உட்பட மொத்தம் 4991 பேர் கச்சத்தீவுக்கு செல்ல பதிவு செய்துள்ளனர்.
இவர்கள் கொடுத்துள்ள ஆவணங்களின் அடிப்படையில் தமிழக பாதுகாப்புப்பிரிவினர் அடையாள அட்டைகளை வழங்குவதற்கான பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்
பதிவு செய்துள்ள நபர்களில் குற்றவாளிகள், கடத்தல் நபர்கள், தடைசெய்யப்பட்ட இயக்கத்தினருடன் தொடர்புடையவர்கள், இலங்கையை சேர்ந்தவர்கள் யாரும் உள்ளனரா என்பது குறித்து இந்திய புலனாய்வு துறையினர் விசாரித்து வருகின்றனர். இவர்களுக்கான அடையாள அட்டைகள் மார்ச் முதல் வாரத்தில் வழங்கப்படும் என்று இந்திய ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.
கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழா 12ஆம் திகதி காலையில் சிறப்பு திருப்பலி, அந்தோணியார் தேர்ப்பவனியுடன் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:
|
|
|


