மானிய அடிப்படையில் இலங்கைக்கு பல கோடி இந்திய ரூபாய்கள்!

இந்திய அரசாங்கத்தினால் கடந்த 4 வருடங்களில் இலங்கைக்கு ஆயிரத்து 25.12 கோடி இந்திய ரூபாய்கள் மானிய அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளதாக இந்திய வெளிவிவகார ராஜாங்கஅமைச்சர் வீ.கே. சிங் தெரிவித்துள்ளார்.
லோக்சபாவில் இந்திய வெளிநாட்டு உதவிகள் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு அவர் எழுத்துமூலம் வழங்கிய பதிலில், இந்த காலப்பகுதியில் இலங்கை, ஆப்கானிஸ்தான் மற்றும் நேபாளம்ஆகிய நாடுகளுக்காக இந்தியா 4 ஆயித்து 312 இந்திய ரூபாய்களை மானியமாக வழங்கியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் யுத்தப் பாதிப்புக்குள்ளான இலங்கையின் மறுசீரமைப்பு மற்றும் அபிவிருத்தி செயற்பாடுகளுக்காக பெருமளவான வேலைத்திட்டங்களை இந்திய அரசாங்கம் முன்னெடுத்து வருவதாகவும்அவர் குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
கல்வி அமைச்சின் நிதிப் பிரிவு பொறுப்பாளர்களை நீக்க பிரதமர் உத்தரவு!
யாழ் நகரில் முன்னணி வெதுப்பகத்துக்கு சீல்!
ஆசிரியர் ஆலோசகர் சேவைக்கு அமைச்சரவை அனுமதி!
|
|