மானிப்பாய் சங்குவேலியைச் சேர்ந்த சிறுவனைக் காணவில்லை !

Monday, March 27th, 2017
யாழ். மானிப்பாய் சங்குவேலிப் பகுதியைச் சேர்ந்த சிறுவனொருவன் காணாமல் போயுள்ளதாகப் பெற்றோரினால் மானிப்பாய்ப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
16 வயதுடைய ஆனந்தராஜா நிஷாந்தன் என்ற சிறுவனே கடந்த-24 ஆம் திகதியிலிருந்து காணாமல் போயுள்ளான். மேற்படி சிறுவன் காணாமல் போகும் போது பச்சை நிற ரீசேட்டும், மெல்லிய பச்சை நிறக் காற்சட்டையும் அணிந்திருந்தான்.
மேலும் குறித்த சிறுவன் மன நலம் பாதிக்கப்பட்டவர் எனவும் தெரிய வருகிறது. குறித்த சிறுவன் தொடர்பாகத் தகவலறிந்தோர் அருகிலுள்ள பொலிஸ் நிலையங்களுக்குத் தகவல் வழங்குமாறு கேட்கப்பட்டுள்ளது.

Related posts:

பயங்கரவாதத்துக்கு எதிரான போரை வெற்றிக்கொள்ள நாம் அனைவரும் ஒன்றிணைந்ததைப் போல்ன்று தற்போதும் கைகோர்க்...
சான்றளிக்கப்பட்ட நகல்களை வழங்குவதில் ஏற்படும் தாமதங்களைத் தவிர்க்க நடவடிக்கை - நீதிச் சேவை ஆணைக்குழு...
சுற்றுலா வீசாவில் சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்குச் சென்ற அனைத்து பெண்களையும் கறுப்புப் பட்டியலில் சேர்...