மானிப்பாயில் மற்றொரு ஆவாக் குழுவின் முக்கியஸ்தர் மாட்டினார்!!

ஆவாக் குழுவின் முக்கியஸ்தரான இளைஞரொருவர் யாழ். சுதுமலை அம்மன் ஆலயத்திற்கு அண்மித்த பகுதியில் வைத்து மானிப்பாய்ப் பொலிஸாரால் இன்று வியாழக்கிழமை(23) கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற பல்வேறு வாள்வெட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடையவர் என்பதுடன் ஆவா குழுவில் முக்கிய பொறுப்பு வகித்து வந்தவர் எனவும் ஆரம்பக் கட்ட விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரை விசாரணைகளின் பின்னர் யாழ். நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தவுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Related posts:
ஒக்ரோபரில் தேசிய வாசிப்பு மாதம்!
6 புதிய நியமனங்களுக்கு நாடாளுமன்ற உயர் பதவிகள் பற்றிய குழுவின் அங்கீகாரம் நாடாளுமன்ற செயலாளர் நாயகம்...
வவுனியாவிலிருந்து 23 கிலோமீற்றர் தொலைவில் சிறு அளவிலான நில அதிர்வு!
|
|