மானிப்பாயில் நான்கு இளைஞர்கள் கைது!

மானிப்பாய் – கல்லுண்டாய் வெளி பகுதியில் சட்டவிரோதமான கூரிய ஆயுதங்களுடன் சென்ற நான்கு இளைஞர்கள் நேற்று இரவு கைதாகியுள்ளனர்.
இரண்டு உந்துருளிகளில் பயணித்த அவர்களை குறித்த பகுதியில் சுற்றிவளைப்பில் ஈடுபட்டிருந்த காவற்துறையினர் கைது செய்துள்ளனர்.
கைதானவர்களிடம் இருந்து இரும்புக் கம்பிகள் மற்றும் வாள் என்பன மீட்கப்பட்டுள்ளன.
இதனிடையே யாழ்ப்பாணம் – பொம்மைவெளி பகுதியில் 18 வயதான இளைஞர் ஒருவர் போலி நாணயத்தாளுடன் கைதானதாக தெரிவிக்கப்படுகிறது.
இரகசிய தகவல் ஒன்றின் அடிப்படையில் அவர் கைதானதாக யாழ்ப்பாண காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். அவரிடம் இருந்து 3 – 5000 ரூபாய் நாணயத்தாள்கள் மீட்கப்பட்டுள்ளன.
Related posts:
அரச அதிகாரிகளுக்கு எதிரான முறைப்பாடுகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு குற்றச்சாட...
வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த சிறந்த மாணவர்கள், அதிபர்கள் கெளரவிப்பு!
கிளிநொச்சியில் இளங்குடும்பஸ்தர் வெட்டிக்கொலை!
|
|