மாணவர்களையும் ஆட்கொள்ளும் ஐஸ் போதை – வெளியானது அதிர்ச்சி தகவல்!
Thursday, December 15th, 2022
இலங்கையில் தொடரும் பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் பாடசாலை மாணவர்களிடையே ஐஸ் போதைப்பொருள் பாவனை சடுதியாக அதிகரித்துள்ளமை பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
போதைப்பொருள் பாவனை தற்போது வேகமாக அதிகரித்துள்ளதாக ஆய்வுகள் வெளியாகியுள்ள நிலையில்,போதைப்பொருளின் பிரதான இலக்காக பாடசாலை மாணவர்கள் குறிவைக்கப்பட்டுள்ளனர்.
இதற்கமைய, மாணவர்கள் வீட்டில் பணம் கேட்டால் கவனமாக இருக்குமாறும், பிள்ளைகள் தொடர்பில் பெற்றோர் எந்த நேரமும் விழிப்புடன் செயற்படுமாறும் தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டு சபை தலைவர் ஷாக்ய நானாயக்கார எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மேலும், மாணவர்களின் உடல் மாற்றங்கள் தொடர்பில் பெற்றோர் தினமும் அவதானிக்க வேண்டும். போதைப்பொருள் பாவனையினால் மாணவர்களின் உடலில் உடனே மாற்றங்கள் ஏற்படாது.
சிறிது காலம் செல்லும் தங்களது பிள்ளைகளை பாதுகாப்பது பெற்றோரின் கைகளிலேயே உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
தற்போது இரும்பு, தகரங்களை சேர்த்துக்கொண்டு நகரிற்குள் வரும் வாகனங்களில் இரகசியமான முறையில் போதைப்பொருள் விற்பனை செய்யப்படுகின்றமை கண்டறியப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இந்நிலையில், கொழும்பில் உள்ள இரண்டு பாடசாலைகளைச் சேர்ந்த 14 மற்றும் 16 வயதுடைய மாணவிகள், ஐஸ் போதைப்பொருள் பாவனையினால் தங்களுக்கு நேர்ந்த மாற்றங்களையும்,தாம் ஐஸ் மருந்துகளை பெற்றுக்கொள்ளும் விதம் தொடர்பிலும் வெளிப்படுத்தியுள்ளளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
|
|
|


