மாணவர்களுக்கு இலவச பயிற்சி புத்தகங்களை வழங்குவதற்கு கல்வி அமைச்சு தீர்மானம்!

Tuesday, August 2nd, 2022

மாணவர்களுக்கு இலவச பயிற்சிப் புத்தகங்களை வழங்குவதில் கல்வி அமைச்சு கவனம் செலுத்தி வருகிறது. இதற்கான நிதியினை ஒதுக்கீடு செய்வதற்கு மத்திய வங்கி நடவடிக்கை எடுத்து வருவதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

குறித்த நடவடிக்கான பயிற்சிப் புத்தகங்களை அரச அச்சகத் திணைக்கள்த்தினால் அச்சிடப்படுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, பாடப்புத்தகங்களை அச்சிடுவதற்காக இந்தியாவில் இருந்து மை மற்றும் காகிதம் ஆகியவற்றினை இறக்குமதி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், மாணவர்களுக்கு மதிய உணவு வழங்குவது குறித்தும் கல்வி அமைச்சு கவன செலுத்திவருவதாக சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது..

00

Related posts: