மாணவர்களுக்கான சீருடை வவுச்சர்கள் பாடசாலை அதிபர்களிடம்!
 Wednesday, December 26th, 2018
        
                    Wednesday, December 26th, 2018
            பாடசாலை மாணவர்களுக்கான சீருடை வவுச்சர்கள் வலய கல்விப் பணிப்பாளர்களின் ஊடாக பாடசாலை அதிபர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக கல்வியமைச்சு அறிவித்துள்ளது.
அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளில் கற்கும் 43 இலட்சம் மாணவர்களும் சீருடைத் துணிகளுக்கான வவுச்சர்கள் வழங்கப்படும்.
இந்த வவுச்சர்களை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 28ஆம் திகதி வரை பயன்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தாண்டில் சீருடைத் துணிகளுக்கான வவுச்சர்களின் பெறுமதி அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
தென்னிலங்கை மீனவர்களுக்கு உள்ளூர் மீனவர்கள் ஒத்துழைப்பு  - குற்றம் சாட்டும் அதிகாரிகள்!
மழையுடனான வானிலை தற்காலிகமாக சிறிது குறைவடையும்!
சிலோன் டீ யை சீனாவில் விற்பனை செய்ய இலங்கை – சீனா  இடையே ஒப்பந்தம் கைச்சாத்து!
|  | 
 | 
 
            
        


 
         
         
         
        