மாகாண சபை தேர்தல்: விசேடமாக தயாரிக்கப்பட்ட வாக்குச் சீட்டு!

Sunday, June 16th, 2019

மாகாண சபை தேர்தல்கள் தொடர்பாக அரசியல் கட்சிகளின் தலைவர்களுடன் தேர்தல்கள் ஆணையாளரால் கூட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.


இதன்போது, தேர்தல் தொடர்பாக பலவிதமான கருத்து பரிமாற்றம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


அத்துடன் வாக்காளர் ஒருவர், போட்டியிடும் எந்தவொரு வேட்பாளருக்கும் தமது வாக்கினை வழங்காத நிலையில், விசேடமாக தயாரிக்கப்பட்ட வாக்குச் சீட்டின் மூலம் வாக்கினை பதிவு செய்யலாம் என தெரிவித்தார்.

இந்த நடைமுறை கடந்த 2009 ஆம் ஆண்டு முதல் இந்திய தேர்தல் வாக்குப் பதிவுகளில் இடம்பெறுகின்றது. இந்த நடைமுறை பின்பற்றப்பட்டால், நிராகரிக்கப்படும் வாக்குகளை  அதிக அளவில் கட்டுப்படுத்த முடியும் என தேர்தல்கள் ஆணையக அதிகாரி சுட்டிக்காட்டியுள்ளார்.


எவ்வாறிருப்பினும், இந்த முறைமைக்கு எந்த அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளும் ஆர்வம் காட்டாததனை அடுத்து இந்த திட்டம் கைவிடப்பட்டதாக தகவலகள் தெரிவிக்கின்றன.

Related posts: