மாகாண சபை தேர்தலை நடத்த நீதிமன்ற ஆலோசனை – மஹிந்த தேசப்பிரிய!

மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கான நடவடிக்கைகளை அமைச்சரவை மற்றும் நாடாளுமன்றம் ஆகியவற்றின் ஊடாக மேற்கொள்ளவில்லை என்றால் உயர் நீதிமன்றத்தின் ஆலோசனையை பெறவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
ஹம்பாந்தோட்டை மாவட்ட செயலகத்தில் நேற்று(13) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் எதிர்வரும் இரு ஆண்டுகளில் மூன்று வகையான தேர்தலை நடத்த வேண்டிய தேவை உள்ளதெனவும் அந்த வகையில், அமைச்சரவையொன்று நாட்டில் இருந்தாலும் இல்லாவிடினும் தேர்தலை நடத்துவதற்கு எந்தவொரு தடையும் இல்லை எனவும் மஹிந்த தேசப்பிரிய சுட்டிக்காட்டியுள்ளார்.
Related posts:
சுதந்திர தினக் கொண்டாட்டத்தில் விசேட அதிதியாக மாலைதீவு ஜனாதிபதி!
ஓய்வூதியம் கேட்டு கனியவள ஊழியர்கள் போராட்டம்!
மின் கட்டண திருத்த யோசனை - இறுதித் தீர்மானம் ஒரு வாரம் ஒத்திவைப்பு!
|
|