மாகாண சபைத் தேர்தலில் கட்சி ஒன்றில் மூன்று பேரை முன்னிறுத்துவதற்கு ஆளும்கட்சி இணக்கம்!
Wednesday, April 21st, 2021
மாகாண சபைத் தேர்தலில், தொகுதி ஒன்றுக்காக, கட்சி ஒன்றில் மூன்று பேரை முன்னிறுத்தும் யோசனைக்கு, ஆளும்கட்சி நாடாளுமன்றக் குழுவின் ஏகமனதாக இணக்கம் வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஆளும் கட்சியின் நாடாளுமன்ற குழு, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் கூடியபோதே, இந்த இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் மிலான் ஜயதிலக்க தெரிவித்துள்ளார்.
தொகுதி ஒன்றில் மூன்று பேரை முன்னிறுத்தி, அவர்களில் மக்களின் ஆதரவை அதிகம் பெறும் நபருக்கு, அந்த தொகுதியின் உறுப்பினராவதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்தும் வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
உல்லாசப் பயணிகளுக்கு ஈ டிக்கெட்: தொல்பொருள் திணைக்களத்தால் அறிமுகம் !
எந்தவித சட்ட நடவடிக்கையும் எடுக்கப்போவதில்லை : முன்னாள் பாதுகாப்பு செயலாளர்!
இந்தியக் குடியுரிமை வழங்க வேண்டும் - தமிழ்நாட்டின் முகாம்களில் உள்ள இலங்கைத் தமிழர்கள் கோரிக்கை!
|
|
|


