மாகாணசபை திறைசேரிக்குத் திருப்பும் நிதிகளை பின்தங்கிய பாடசாலைகளின் பௌதீக வளங்களுக்கு தந்துதவுங்கள் – பருத்தித்துறை பிரதேசசபையின் முன்னாள் தலைவர் ஸ்ரீரங்கேஸ்வரன் கோரிக்கை.!

Wednesday, June 22nd, 2016
வடக்கு மாகாணசபை திறைசேரிக்குத் திருப்பும் நிதிகளை எமது பின்தங்கிய பாடசாலைகளின்பௌதீக வளங்களுக்கு தந்துதவி மாணவர்களின் எதிர்காலத்திற்கு உதவுங்கள். இதற்கு மாகாணசபை உறுப்பினர்கள் மாகாண கல்வி அமைச்சிடம் வலியுறுத்துங்கள் எனஈழமக்கள் ஜனநாயக கட்சியின் வடமராட்சி பிரதேச நிர்வாக செயலாளரும் பருத்தித்துறை பிரதேசசபையின் முன்னாள் தலைவருமான ஐயாத்துரை ஸ்ரீரங்;கேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
வடமராட்சி கிழக்கு மருதங்கேணி இந்து தமிழ்க்கலைவன் வித்தியாலயத்தின் பரிசில் தினம்நேற்றுமுன்தினம் (21) வித்தியாலய அதிபர் செல்லத்துரை ஸ்ரீஇராமச்சந்திரன் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் கௌரவ விருந்தினராகக் கலந்து உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் உரையாற்றுகையில் – யுத்தம் அனர்த்தம் என எமது பிரதேசம் பல்வேறு இடர்களைச்சந்தித்து வந்துள்ளது. மீள்குடியேற்றம் ஆரம்பமானது முதல் கல்வித்துறைக்குபல்வேறு குறைபாடுகள் காணப்பட்டது. ஆசிரியர் பற்றாக்குறை போக்குவரத்துதளபாடப்பற்றாக்குறை குறிப்பாக கட்டிடங்கள் அழிவடைந்த நிலையிலிருந்த சூழல். இருந்தும் என்ரப் திட்டத்தின் மூலம் அதனைக் கட்டியெழுப்ப நாம் பல்வேறு அர்ப்பணிப்புக்களுடன் செயற்பட்டோம். யுத்தத்தால் அழிவடைந்திருந்த நான்கு வகுப்பறைத் தொகுதிகளின் கூரைவேலைகளை புனரமைப்புச் செய்தோம். அழகியல் வகுப்பறைக் கட்டிடம் சமையல்கூடம் தண்ணீர்த்தாங்கி என மேலும் பணிகளைச் செய்திருந்தோம்.
இப்பாடசாலைக்கு கேட்போர் கூடம் இல்லை. நான்கு வகுப்பறைகளைக் கொண்ட கட்டடத் தொகுதி தேவைப்பாடாக உள்ளது. மாணவர்களின் தகவல் தொடர்பாடல் மற்றும் தொழில்நுட்பத்துறையை விருத்தி செய்யும் பொருட்டு இணையத்தள கணணி ஆய்வு கூடம் தேவைப்பாடக உள்ளது. நூலக தளபாடங்கள் ஆசிரியர் மாணவர்களுக்கான கதிரை மேஜைகள் பற்றாக்குறையாக உள்ளது.
இக்குறைபாடுகளை நிறைவேற்றிக் கொடுக்க வேண்டிய பொறுப்பு மாகாண கல்வி அமைச்சுக்கு உள்ளது. அதற்கு நிதி இல்லை என்கிறார்கள். ஆனால் இப்பாடசாலைக்கு அதிபர் விடுதியை அமைப்பதற்கு உலக வங்கி ஊடாக நிதி கிடைத்திருந்தும் மாகாணசபை அதனை நிறுத்திவைத்துள்ளது. எனவே வடக்கு மாகாணசபை திறைசேரிக்குத் திருப்பும் நிதிகளை எமது பின்தங்கிய பாடசாலைகளின் பௌதீக வள அபிவிருத்திக்கு உதவவேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.
மேலும் இன்றைய மாகாண கல்வி அமைச்சின் அசமந்தப் போக்கால் பாடசாலைக்குள் கல்வி கற்கச் செல்லும் மாணவிகளுக்கு அங்கு பாதுகாப்பு இல்லை. பெற்றோர்களும்பாடசாலையிலேயே வகுப்பு முடியும் வரை வகுப்பிலேயே குந்தியிருக்கும் சூழ் நிலை உருவாகியுள்ளது. வரணி மகா வித்தியாலயம்  பெரியபுலம் மகா வித்தியாலயத்தில் என்ன நடக்கிறது? மிகவும் கேவலமான நிலையிலேயே வடக்கு மாகாண அரசு செயற்படுகிறது. எனவே பெற்றோர்கள் பிள்ளைகளின் பாதுகாப்பில் கூடிய கவனம் செலுத்த வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இப்பரிசில்கள் பிரதம விருந்தினராக வடமராட்சி வலயக் கல்விப்பணிப்பாளர் உயர்திரு சிவபாதம்நந்தகுமார் அவர்களும் சிறப்பு விருந்தினராக வடக்கு மாகாணசபை உறுப்பினர் கணபதிப்பிள்ளை தர்மலிங்கம் அவர்களும் கௌரவ விருந்தினராக மருதங்கேணி கோட்டக்கல்வி அதிகாரி சங்கரப்பிள்ளை திரவியராசா ஆகியோர் கலந்து கொண்டனர்.
d83dd7e6-c924-4974-95db-3bbe2eb022ec
d1c708ac-6c68-4042-b18b-f007b0580f16
cc76e90d-b72c-42df-95f8-b88d473c4560
d969a810-8cd0-4ffd-845b-c42c2e110890
95d87c91-b96e-474f-b3d3-25312df841d8
9a12d94c-d0a3-453d-8d51-ce92146175d0
1f54cb89-ab38-450f-95b1-f347771ef172

Related posts: