மாகாணசபைகளில் பிரிவினைவாதம் பேசத்தடை – பிரதமர்!

மாகாணசபைகளில் பிரிவினைவாதம் பேசுவதற்கு தடை விதிக்கப்பட உள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளார்.
நாட்டின் எந்தவொரு மாகாணசபையிலும் பிரிவினைவாதம் பற்றி பேசுவதற்கு இடமளிக்காத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
புதிய அரசியல் அமைப்பில் இது தொடர்பிலான ஓர் விசேட சரத்தினை உள்ளடக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார். நேற்று நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். வடக்கு மாகாண சபையில் பிரிவினைவாதம் பேசப்படுவதாக தெற்கு அரசியல் கட்சிகள் குற்றம் சுமத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
தாய்லாந்து அரசர் பூமிபோன் அடூன்யடேட் மரணம்!
வேலணை சாட்டி குடிநீர் கிணறுகளின் பாதுகாப்பு தொடர்பில் தவிசாளர் தலைமையிலான குழுவினர் நேரில் சென்று ஆர...
கொரோனா வைரஸ்: சந்தேகிக்கப்பட்ட 311 இலங்கையர் தொடர்பில் வெளியான தகவல்!
|
|